A car parked home at Perambalur suddenly burned fire: police investigation
பெரம்பலூர் நான்கு ரோடு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது, வீட்டினுள் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.
பெரம்பலூர் நான்கு ரோடு இந்திரா நகர் பகுதியில் வசிப்பவர் அன்புச்செழியன்(45), இவர் அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் முன் பகுதியிலுள்ள போர்டிகோவில் 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஷவர்லட் என்ஜாய் என்ற காரை நிறுத்தி விட்டு வீட்டினுள் தூங்கி விட்டார்.
இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென ஜன்னல் கண்ணாடி வெடித்து சிதறியதோடு, வீட்டினுள் நெருப்பு ஜூவாலைகள் வந்ததோடு,வீட்டினுள் புகை மூட்டம் சூழ்ந்து மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையறிந்த அன்புச்செழியன் வீட்டினுள் தூங்கி கொண்டிருந்த தனது மனைவி மற்றும் குழந்தைகள் மற்றும் மைத்துனர்களின் இரண்டு மனைவிகள் (கர்பிணிகள்) உள்ளிட்டோரை கூச்சலிட்டு எழுப்பியதும் அனைவரும் வீட்டை விட்டு அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ர் சென்று தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த விபத்தில் 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வாசிங் மெஷின் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் கூடடின் சுவர் உட்பட ஏரளமான பொருட்கள் எரிந்து சேதமானது.
இதுகுறித்து அன்புச்செழியன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காரில் எலக்ட்ரிக்கல் பிரச்சினையால் தீ பற்றி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
இது குறித்து போலீசார் மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.