A consultation meeting with journalists in Perambalur on behalf of a charity organization on violence against children

பெரம்பலூரில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம், யுனிசெப் மற்றும் தோழமை தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து செய்தியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குழந்தைத் திருமணம் குழந்தைப் பருவத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறது. குழந்தைகளின் அடிப்படை உரிமைகளாகிய கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை பறிக்கப்படுகிறது. வாழ்க்கையில் கற்றுக் கொள்வதற்கும், வளர்வதற்கும் மற்றும் முழு ஆற்றலை அடைவதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்து வருகிறது. தன்னிச்சையாக செயல்படுவதற்கான சுதந்திரம் முடக்கப்படுகிறது. உடல் மற்றும் பாலியல் சார்ந்த வன்முறைக்கு உட்படுத்தப்படுவதற்கான அதிக ஆபத்து, வறுமை சுழற்சி, இளவயது கர்ப்பம், தனிநபர் வாழ்க்கை தரம், சமுதாயம் மற்றும் நாடுடைய பொருளாதார சமூக வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறது.

குழந்தை திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை குறைப்பதற்கும், அப்பணியில் செய்தியாளர்களை ஈடுபடுத்தி சமூக அக்கறையுடன் கையாண்டு பொதுமக்களிடம் விரைந்து செல்வதற்காகவும், இதில் சிறார் நிதி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்ட சட்ட ஆலோசனைகளும், குழந்தைகளின் கருத்துகளுக்கு மதிப்பளிப்தோடு ஊடகங்களில் குழந்தைகள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்துவது குறித்து செய்தியாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எஸ்.துரைமுருகன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (மாநில வள மையம்) பூரணி, மூத்த பத்திரிகையாளர் ஆர்.இராமசுப்ரமணியன்(எ) மணி, தோழமை தொண்டு நிறுவன இயக்குநர் அ.தேவநேயன், வக்கீல் சுப.தென்பாண்டியன், பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர்கள், புகைப் படக்காரர்கள், ஒளிப் பதிவாளர்கள் மற்றும் ரோவர் கல்லூரியில் பயிலும் ஊடகவியல் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!