A grandson who went to a ration shop with his grandmother near Perambalur fell into a pit and died!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வடகரை அருகே உள்ள மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் இவரது மகன் ரோகித் சர்மா(வயது 3). இன்று தனது பாட்டி தங்கம்மாளுடன் ரோகித் சர்மா அங்குள்ள ரேசன் கடைக்கு சென்றுள்ளார்.

ரேசன்கடை அருகில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் தண்ணீர் நிரம்பி கிடந்தது. அப்போது அங்கு விளையாட சென்ற ரோகித் சர்மா கட்டிடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்தான். அப்போது அருகில் காப்பாற்ற யாரும் இல்லாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். பேரனை காணவில்லை என பாட்டி தங்கம்மாள் தேடிய போது அருகில் உள்ள குழியில் விழுந்து இறந்து கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்த தகவலின் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கை.களத்தூர் போலீசார், ரோகித் சர்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு கட்டிடம் கட்டுவதற்கு குழி தோண்டியவர்கள் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தியிருந்தால் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்காது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!