A Law assistant arrest and Hide by Police in Perambalur.

பெரம்பலூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில், பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், மற்றும் போலி செய்தியாளர் தல வேல் என்கிற வேல்முருகன் என்பவரும் இணைந்து வேலை கேட்டு வந்த பெண்ணிடம், தகாத முறையில் நடந்து கொண்டதுடன், அதனை வீடியோவாக பதிவு செய்து அதை வைத்துக் கொண்டு மீண்டும் மிரட்டி உல்லாசத்திற்கு அழைத்தாகவும், அதனை காவல் துறையினரிடம் விசாரிக்க கோரியும் மனு கொடுத்து இருந்தார்.

மேலும், காவல் துறை விசாரணையில் திருப்தி ஏற்படாத காரணத்தால் ஆடியோ ஒன்றையும் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் வழக்கறிஞர் நலச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் சம்மன் அனுப்பாமலும், விசாரணை நடத்தாமலும், குன்னத்தில் வக்கீல் அருளை கைது செய்த போலீசார் கை.களத்தூர் காவல் நிலையத்திற்கு காரில் அழைத்து சென்றனர். மீண்டும் பெரம்பலூர் அழைத்து வந்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி ஓரிரு தினங்களுக்கு முன்பு சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் போலீசார் போட்ட வழக்கை நிரூபிக்கும் வகையிலும், வக்கீல் அருள் வெளியிட்ட ஆடியோ பொய் என்றும், வக்கீல் கூறிய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என சரிகட்ட, வக்கீல் அலுவலகத்தில் உதவியாளராக வேலைபார்த்து வந்த பெண்ணை போலீசார் நேற்றிரவு கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், அவரை கட்டாயப்படுத்தி குரல் உள்ளிட்ட பரிசோதனைக்கு பணித்ததுடன், அந்த பெண்ணை நிர்பந்தப்படுத்தி ஒப்புக் கொள்ள வைக்கவும் போலீசார் போராடி வருகின்றனர். மேலும், வக்கீலின் உதவியாளரை அடையாளம் தெரியாத போலீசார் அவர் பெயரில் இருந்த பல குடும்ப பெண்களை கைது செய்து அழைத்து வந்துள்ளனர். போலீசின் தவறான போக்கால் அந்த பெண்களின் குடும்பத்திலும் குழப்பம் ஏற்பட்டது.

போலீசாரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் போலீசாரின் போக்கு பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்நிலையில் அட்கேட் அசோசியன் சங்கம், வக்கீல் அருள் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்ப்பட்ட சம்பவத்தை காவல் துறையை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டள்ளனர். மேலும், வழக்கறிஞர் தொழிலை நசுக்கும் காவல் துறை கண்டித்து தொடர் போராட்டகளும் நடத்த உள்ளதாக அச்சங்கத்தின் நிர்வாகி முஹமது இலியாஸ் தெரிவித்தார். அப்போது அச்சங்கத்தின் நிர்வாகிகள் , உறுப்பினர் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!