A mentally ill person who has been receiving treatment at Vela Mercy Home for 5 years, handed over to a relative!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா அறிவுரைப்படி, வேலா கருணை இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தவரை, அவரது உறவினர்களிடம் அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு, ரோட்டில் சுற்றித் திரிந்துகொண்டிருந்த நரசிம்மன் (எ) நரசிம்மலு என்பவரை கடந்த 16.03.2016 அன்று வேலா கருணை இல்லத்தின் மூலம் மீட்கப்பட்டு பின்பு மாவட்ட மனநல மருத்துவரின் பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் இல்லத்தில் சேர்க்கப்பட்டு, மருத்துவரின் ஆலோசனையின்படி, மனநலத்திற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு அவரின் சிந்தனை நல்வழிப்படுத்துவதற்கு தொழிற்பயிற்சி விவசாயம் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்பு நரசிம்மன் (எ) நரசிம்மலு அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அவர் வீட்டாருக்கு வேலா கருணை இல்லத்தின் நிர்வாகி அனிதா அருண்குமார் மூலம் ஆந்திரபிரதேஷ், குண்டூர், காந்திபேட்டையில் வசிக்கும் அவரது சகோதரி மஞ்சுளா சாரதா அஜ்சநேயலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் முன்னிலையில் தகுந்த ஆவணங்களை பெற்றுக்கொண்டு சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களிடம் ஒப்படைத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!