A.Raja MP inaugurated the mammogram program of Indian Medical Association, Women’s Wing at Perambalur.
பெரம்பலூர் நகராட்சி வளாகத்தில் இன்று காலை, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்திய மருத்துவ சங்கத்தின், மகளிர் பிரிவு சார்பிலும், திருச்சி காவேரி மருத்துவமனையும் இணைந்து, பெண்களுக்கான இலவச மெமோகிராம் எனப்படும், ஆரம்ப நிலை மார்பக புற்று நோய் கண்டறியும் முகாம், டாக்டர் வல்லபன் தலைமையில் நடந்தது. மூத்த பெண் மருத்துவர்களுக்கு, பொன்னாடை போர்த்தி, மெமோகிராம் மருத்துவ முகாமை நீலகிரி எம்.பி.யும், திமுக-வின் துணைப் பொதுச்செயலாருமான ஆ.ராசா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன், பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகாராஜேந்திரன், யூனியன் சேர்மன்கள் மீனாஅண்ணாதுரை (பெரம்பலூர்), பிரபாசெல்லப்பிள்ளை (வேப்பூர்), கே.ராமலிங்கம் (வேப்பந்தட்டை), நகராட்சி ஆணையர் ச.குமரிமன்னன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மருத்துவர்கள் சங்கத்தின் மூத்த தலைவர் எம்.டி.ஆர். தங்கராஜ், லட்சுமி மருத்துவமனை டாக்டர் கருணாகரன், நிரஞ்சன் மருத்துவமனைடாக்டர் பால்ராஜ், அரசு மருத்துவர்கள் அர்ச்சுனன், ரமேஷ், பெண் மருத்துவர்கள் புவனேஸ்வரி தேவராஜன், பானுமதி ஆண்டியப்பன், வசந்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பெரம்பலூர் கிளை இந்திய மருத்துவர் சங்கத்தின் மகளிர் கிளை செயலாளர் சுமதிசெங்குட்டுவன் வரவேற்றார். பெரம்பலூர் ஐ.எம்.ஏ வை சேர்ந்த செயலாளர் சுதாகர், சத்யா, விஜய்ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து மார்பக புற்று நோய் கண்டறியும் மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தனர்.