A student stole a bike at Perambalur
பெரம்பலூரில் நிறுத்தப்பட்டு இருந்த விவசாயின் பைக்கை திருடிய 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனை போலீசார் கைது செய்து கூர் நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். விவாசயி. இவர் கடந்த 27ம் தேதி பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே தனது சொந்த பைக்கை நிறுத்தி விட்டு மருத்துவமனையின் உள்ளே சென்றிருந்தார். பின்னர், திரும்பி வந்து பார்த்த போது விலையுர்ந்த அதிநவீன பைக்கை காணவில்லை. அக்கம் பக்கத்தாரிடம், விசாரித்தும், தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து செல்வக்குமார் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர், அவ்வப்போது காணமல் போன பைக்கை விசாரித்தும், தேடியும் வந்தார். அப்போது நெம்பர் பிளேட் கழற்றப்பட்டு, சில அடையாளங்கள் மாற்றம் செய்து சிறுவன் ஒருவன் ஓட்டி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
பெரம்பலூர் போலீசார் காவல்துறை சார்பில் ஆங்காங்கே பொருத்தப்பட்ட கேமார மூலம் கண்காணித்தனர். விசாரணையில் பெரம்பலூர் பள்ளியில் பதினோரம் வகுப்பு மாணவன் என்பதும், செங்குணம் கிராமத்தை சேர்ந்தவன் என்பதை உறுதி செய்தனர். பின்னர், சிறுவனின் வீட்டிற்கு சென்ற போலீசார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை மீட்டதுடன், அவனை கைது செய்து விசாரணை நடத்தியதில், மாணவன் வாகனத்தை களவாடி வந்ததையும் ஒப்புக் கொண்டான்.
நீதிமன்றத்தில் நேர்நிறுத்திய பெரம்பலூர் போலீசார் திருச்சியில் உள்ள கூர்நோக்கு இல்லத்திற்கு (சிறுவர் சீர்திருத்தப்பள்ளி) அனுப்பி வைக்கப்பட்டான்.
ஒரு மாதத்திற்கு 8 சிறுவர்கள் கைது:
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 30 நாட்களுக்குள் பெரம்பலூர் மாவட்டத்தில் 8 சிறுவர்கள் இது போன்று குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம்சிறார்கள் குற்றச் செயல்களில் அதிகளவு ஈடுபட சமுதாயம் உடன் பழகுவோர் மட்டுமில்லாமல் சினிமா போன்ற ஊடகங்களும், அதிக அளவு மக்களுக்கு நல்வழிப்பாதை படுத்தாதோடு, ஒழுக்கத்தை கற்பிக்காத கல்வியும் முறையும் உடந்தையாக உள்ளது என்பது பெருமபாலலோரின் கருத்தாக உள்ளது.