A teenager was drowned in bathing in Rock Quarry near Perambalur: Police investigate
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள ஊத்தாங்கால் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 13) இவர் பாடாலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றார். நேற்று விடுமுறை நாள் என்பதால் அந்த பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைக்கு நண்பர்களுடன் குளிக்க சென்று உள்ளார். எதிர்பாரத விதமாக தண்ணீரில் மோகன்ராஜ் மூழ்கினார். இதை மோகன்ராஜ் பார்த்த நண்பர்கள் தண்ணீரில் குதித்து மோகன்ராஜை காப்பாற்ற முயன்றனர், ஆனால் முடியவில்லை.
இதையடுத்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் தெரிவிக்கபட்டு தீயணைப்பு படைவீரர்கள் 6 மணி நேரத்திற்க்கு பின் மோகன்ராஜ் சடலத்தை குவாரி குட்டையில் இருந்து மீட்டனர். உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பாடாலூர் போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவர விசாரணை நடத்தி வருகின்றனர்.