A tentimes increase in the price of a stamp application: public, legal dissatisfied

நீதிமன்றம், தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் மனு ஸ்டாம்ப் விலை திடீரென 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அனைத்து அலுவலகத்திலும் தமிழக அரசின் திட்டங்கள் பெற , தாலுகா, யூனியன் அலுவலகத்தில் சான்றிதழ் பெற மற்றும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய மனு ஸ்டாம்ப் கட்டாயமாக பயன்படுத்திட வேண்டும் என விதிமுறை உள்ளது.

ஒவ்வொரு மனுவிற்கு 2 ரூபாய் மனு ஸ்டாம்ப் ஓட்டினால் போதுமானது. இதனால் அரசு அலுவலககங்களில் பொது மக்கள் மனு விண்ணப்பங்கள் அளிக்க ஏதுவாக இருந்தது.இந்நிலையில் கடந்த 1 ஆம்தேதி முதல் ரூ 2 மனு ஸ்டாம்பு ரூ 20 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் ஒரு மனு செய்ய வேண்டும் என்றாலும் 20 ரூபாய் மனு ஸ்டாம்பையே பயன்படுத்தி விண்ணப்பம் செய்ய வேண்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மனு கொடுக்கவே கூடுதலாக செலவு ஆகிறது என பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதே போன்று நீதிமன்றத்தில் வக்கீல்கள் மனு தாக்கல் செய்ய மனு ஸ்டாம்பு விலை உயர்வால் ஒரு வழக்குகளுக்கே ரூ 1000க்கு மேல் செலவு ஆவதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்ததாவது : இப்போது விலை உயர்த்தப்பட்ட ரூ 20 மனு ஸ்டாம்ப்யே பயன்படுத்தி மனுவை விண்ணப்பிக்க வேண்டும். ரூ2 மனு ஸ்டாம்பு மூலம் விண்ணபித்தால் மனுவானது தள்ளுபடி செய்யப்படும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கின்றனர்.

இதனால் மக்களுக்கு பணவிரயம் அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இதனால் தமிழக அரசு இதனை கவனித்து மனு ஸ்டாம்ப் விலையை மக்களின் நலன் கருதி குறைக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!