Aadhaar number by logging collects money, 10 thousand fine, one year in prison
aadhaard
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் சோ;க்கை பணி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாயிலாக அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நிரந்தர சேர்க்கை மையங்கள் நடைபெற்று வருகிறது.

நிரந்தர சேர்க்கை மையங்களில் நடைபெறும் புதிய ஆதார் பதிவிற்கு கட்டணம் ஏதும் கிடையாது. இது ஒரு கட்டணம் இல்லாசேவை ஆகும்.

ஆனால், தனி நபர்கள் சிலர் விரைவாக ஆதார் எண் பெற்றுத் தருவதாகக் கூறி பொது மக்களிடம் பணம் வசூலிப்பதாகத் தெரிய வந்துள்ளது. பொதுமக்களை ஏமாற்றும் இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழிமுறைகளை வகுத்துள்ளது.

இந்த வழிமுறைகளின்படி, பொது மக்களிடம் கட்டணம் வசூலிக்கும் நபர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் வரை அபராதமாக வசூலிக்கவும், ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஆதார் எண்ணை பெற தமிழக அரசின் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் நிர்வகிக்கப்படும் நிரந்தர சேர்க்கை மையங்களை பயன்படுத்திக்கொள்ளலாம், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!