மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்குவது முட்டாள் தனம், சிலர் தண்ணி குதிரையை நம்பி தேர்தலில் இறங்கி இருக்கிறார்கள், என குன்னம் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை விந்தியா பேச்சு.
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரனை ஆதரித்து நடிகை விந்தியா ஆலத்தூர் அருகே உள்ள கொளக்காகாநத்தம் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
வேணும்ன்னா ஒட்டுறதும், வேணாம்னா வெட்டுறதும் கருணாநிதிக்கு கை வந்த கலை, இந்திரா காந்தியையே தமிழ்நாட்டுக்கு வாங்க விடோ (விதவை) பென்சன் தர்ரோம்ன்னு சொன்னவங்க, ஆனா இன்னிக்கு இதயம் இனிக்க கண்கள் பணிக்க குலாம் நபி ஆசாத்துடன் கட்டி புடிச்ட்டு குலவுராரு, காங்கிரஸ் கூட கூட்டணிக்காக, இதே கருணாநிதி, இதே காங்கிரசை விட்டு வெளியில வரும் போது என்னென்ன பேசுனார்ன்னு கருணாநிதிக்கு வேணும்னா மறந்து இருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கு மறக்காது, கூடா நட்பு கேடா முடிந்ததுன்னு சொன்னாரு, குதிரை குப்புற தள்ளியதுடன் குழியும் பறித்ததுன்னு சொன்னாரு, ஈழ தமிழர்களின் அழிவுக்கு காரணமான இருந்தது காங்கிரஸ்னு சொன்னாரு, ஆனா குஷ்புவோட இளங்கோவன் வரும் போது சுகர் பேசண்ட் ஸ்வீட்டை பார்த்து வழிய மாதிரி வழியுறாறு, திமுக காங்கிரஸ் கூட கூட்டணி வைச்சுருக்கிறது கொள்கைக்காகவா, குஷ்புக்காகவா சொல்லிட்டா திமுக தொண்டர்கள் சரியா வேலை பார்ப்பார்கள்,
மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்குவது முட்டாள் தனம், சிலர் தண்ணி குதிரையை நம்பி தேர்தலில் இறங்கி இருக்கிறார்கள், மாபெரும் சபைதனில் நீ நடந்தால் மாலைகள் விழவேண்டும், அப்படி வாழ்றவன்தான் தலைவன், ஆனா தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடந்தா மாலைகள் விழாது, அவரே விழுவாரு! , குடித்து குடித்து குரல் போனதற்கும் குண்டடி பட்டு குரல் போனதற்கும் பிரமேலதாவிற்கு வித்தியாசம் தெரியாது , பேசினார். தொடர்ந்து நல்லாட்சி மலர அதிமுக வேட்பாளருக்கே வாக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ஆலத்தூர் என்.கே. கர்ணன், குரும்பாளையம் நாகராஜ் உள்பட கட்சி பிரமுகர்கள் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.