Admission of Students in Sports Clubs, Primary Level Sports Center and Special Sports Clubs: Perambalur Collector Information.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 2024ஆம் ஆண்டிற்கான பள்ளி மாணவ, மாணவியர்கள் 7, 8, 9, மற்றும்11 ஆம் வகுப்புகளில் சேருவதற்கான மாவட்ட அளவிலான தேர்வுப்போட்டிகள் எதிர்வரும் 10.05.2024 அன்று மாணவர்களுக்கும், 11.05.2024 அன்று மாணவியர்களுக்கும் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கத்தில் நடத்தப்படவுள்ளது.

விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவியர்கள் சேருவதற்கு 26.04.2024 முதல் 08.05.2024 மாலை 5.00 மணி வரை ஆன்லைன் மூலம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்களுக்கான தேர்வுப்போட்டிகள் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபாடி, கையுந்துபந்து, கிரிக்கெட் மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுகளுக்கும், பள்ளி மாணவியர்களுக்கான தேர்வு போட்டிகள் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபாடி, மற்றும் கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளுக்கும் நடத்தப்படும், மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான தேர்வுப்போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

சிறப்புநிலை விளையாட்டு விடுதியில் கல்லுாரி மாணவ, மாணவியர்கள் சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வுப்போட்டிகள் 06.05.2024 அன்று கீழ்கண்ட விவரப்படி நடைபெறவுள்ளது. கல்லுாரி மாணவர்களுக்கான தடகளம், குத்துச்சண்டை, கபாடி மற்றும் பளுதுாக்குதல் விளையாட்டுகளுக்கான தேர்வு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னையிலும், ஹாக்கி விளையாட்டிற்கான தேர்வு எம்.ஆர்.கே ஹாக்கி விளையாட்டரங்கம், சென்னையிலும் நடைபெறவுள்ளது. கல்லுாரி மாணவியர்களுக்கான தடகளம், குத்துச்சண்டை, கபாடி மற்றும் பளுதுாக்குதல் விளையாட்டுகளுக்கான தேர்வு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னையிலும், கூடைப்பந்து, கையுந்து பந்து, கைப்பந்து. கால்பந்து ஆகிய விளையாட்டிற்கான தேர்வு எம்.ஆர்.கே ஹாக்கி விளையாட்டரங்கம், சென்னையிலும், நடைபெறவுள்ளது. நீச்சல் விளையாட்டிற்கான தேர்வு நீச்சல்குள வளாகம், வேளச்சேரி சென்னையிலும் எதிர்வரும் 06.05.2024 காலை 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது,

முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் 6, 7, மற்றும் 8 ஆம் வகுப்பில் பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் சேருவதற்கான மாநில அளவிலான தேர்வுப்போட்டிகள் எதிர்வரும் 07.05.2024 அன்று காலை 7.00 மணி முதல் கீழ்கண்ட விவரப்படி நடைபெறவுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான தடகளம், குத்துச்சண்டை, மேசைப்பந்து, டேக்வாண்டோ, மற்றும் பளுதுாக்குதல் ஆகிய விளையாட்டுகளுக்கான தேர்வு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னையில், இறகுபந்து, வில்வித்தை ஆகிய விளையாட்டுகளுக்கான தேர்வு நேரு பூங்கா விளையாட்டரங்கம், சென்னையிலும், ஜிம்னாஸ்டிக் மற்றும் நீச்சல் விளையாட்டுகளுக்கான தேர்வு வேளச்சேரி நீச்சல்குள வளாகம், சென்னையிலும், டென்னிஸ் விளையாட்டிற்கான தேர்வு நுங்கம்பாக்கம், டென்னிஸ் விளையாட்டரங்கம், சென்னையிலும், சைக்கிளிங் விளையாட்டிற்கான தேர்வு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைகழக வளாகம், மேலகோட்டையூர் (TNPESU) செங்கல்பட்டிலும் 07.05.2024 அன்று காலை 7.00 மணி முதல் நடைபெறவுள்ளது. பள்ளி மாணவியர்களுக்கான தடகளம், குத்துச்சண்டை, மேசைப்பந்து, டேக்வாண்டோ, ஆகிய விளையாட்டுகளுக்கான தேர்வு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னையிலும், இறகுபந்து, வில்வித்தை ஆகிய விளையாட்டுகளுக்கான தேர்வு நேரு பூங்கா விளையாட்டரங்கம், சென்னையிலும், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் நீச்சல் விளையாட்டிற்கான தேர்வு நுங்கம்பாக்கம், டென்னிஸ் விளையாட்டரங்கம், சென்னையிலும், சைக்கிளிங் விளையாட்டிற்கான தேர்வு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகம், மேலகோட்டையூர் (TNPESU) செங்கல்பட்டிலும் 07.05.2024 அன்று காலை 7.00 மணி முதல் நடைபெறவுள்ளது.

விளையாட்டு விடுதி மாநில அளவிலான நேரடி தேர்வு பள்ளி மாணவர்களுக்கு 13.05.2024 அன்றும், பள்ளி மாணவியர்களுக்கு 14.05.2024 அன்றும் கீழ்க்கண்ட விவரப்படி நடைபெறவுள்ளது, பள்ளி மாணவர்களுக்கு குத்துச்சண்டை, வாள் விளையாட்டு, ஜீடோ, பளு தூக்குதல் மற்றும் ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுக்கு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் சென்னையிலும், டேக்வாண்டோ விளையாட்டுக்கான தேர்வு மாவட்ட விளையாட்டரங்கம், கடலுாரிலும், மல்லர்கம்பம் விளையாட்டுக்கான தேர்வு மாவட்ட விளையாட்டரங்கம் விழுப்புரத்திலும், மல்யுத்தம் மற்றும் வூஷீ விளையாட்டுக்கான தேர்வு மாவட்ட விளையாட்டரங்கம், திருச்சியிலும் எதிர்வரும் 13.05.2024 அன்று காலை 7.00 மணி முதல் நடைபெறவுள்ளது. பள்ளி மாணவியர்களுக்கு குத்துச்சண்டை, வாள் விளையாட்டு, ஜீடோ மற்றும் பளுதுாக்குதல் ஆகிய விளையாட்டுக்கள் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னையிலும், டேக்வாண்டோ விளையாட்டுக்கான தேர்வு மாவட்ட விளையாட்டரங்கம், கடலூரிலும் எதிர்வரும் 14.05.2024 அன்று 7.00 மணி முதல் நடைபெறவுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள விளையாட்டுக்களில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவம் 26.04.2024 முதல் www.sdat.tn.gov.in மற்றும் tntalent.sdat.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்புநிலை விளையாட்டு விடுதிக்கான விண்ணப்பிக்க கடைசிநாள் 05.05.2024 மாலை 5.00 மணி, முதன்மைநிலை விளையாட்டு விடுதிக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் 06.05.2024 மாலை 5.00 மணி, விளையாட்டு விடுதிக்கு விண்ணப்பிக்க 08.05.2024 மாலை 5.00 மணி ஆகும். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஆன்லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்ய இயலாது.

ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும். மேலும் தகவல் பெற ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைபேசி 95140 00777 என்ற எண்ணில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரை தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம். தேர்வுப்போட்டியில் கலந்துகொள்ள வருகின்றவர்களுக்கு பயணப்படியோ, தினப்படியோ வழங்கப்படமாட்டாது.

எனவே, 2024-2025 ஆம் ஆண்டிற்கு விளையாட்டு விடுதிகள் முதன்மைநிலை விளையாட்டு மையம் மற்றும் சிறப்புநிலை விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மாணவ. மாணவியர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெற வேண்டுமென பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!