Agriculture Department projects, Director of Agriculture Datsinamurthy visited and inspected

வேளாண்மை துறை மாநில இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் கிராமத்தில் தங்கவேல் என்பவரது மக்காசோள வயலில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட படைப்புழு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல்விளக்க திடலினை ஆய்வு செய்தார். அப்பொழுது விவசாயிகளிடம் மக்காசோள பயிரில் படைப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை தெரிவித்தார். படைப்புழுவின் கூட்டுப்புழுவில் இருந்து வெளிவரும் தாய் அந்துப் பூச்சியானது 1500-2000 முட்டைகள் இடுகின்றன. இவை அனைத்தும் புழுக்களாக மாறி மக்காச்சோள பயிரினை தாக்குகின்றன. ஆதலால் அனைத்து விவசாயிகளும் கோடை உழவு செய்து படைப்புழுவின் கூட்டுப்புழுவினை அழிக்கலாம்.

அனைத்து விவசாயிகளும் ஒரே சமயத்தில் விதைப்பு செய்ய வேண்டும். பல்வேறு நிலைகளில் விதைப்பு செய்தால் வளர்ச்சி நிலையில் உள்ள மக்காச்சோள பயிர்களில் படைப்புழு அதிக அளவில் தாக்கும். விதைகள் விதைப்பதற்கு முன்பே எக்டருக்கு 12 இனக்கவர்ச்சி பொறிகள் வைப்பதன் மூலம் இயற்கையான முறையில் தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழித்துவிடலாம். ஒரு கிலோ மக்காசோள விதைக்கு 10 கிராம் வீதம் பேவேரியா பேசியானா என்ற பூஞ்சானத்தை கலந்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

மக்காச்சோளம் விதைக்கும் போது அதனுடன் வயல் ஓரங்களில் தட்டைப்பயறு, ஆமணக்கு, சூரியகாந்தி, சாமந்தி பூ ஆகியவற்றை ஊடுபயிராக விதைப்பதன் மூலம் படைபுழுவின் தாக்குதலை குறைக்கலாம் என தெரிவித்தர். மேலும், படைப்புழு தாக்குதல் அதிகமாக தென்படும் பொழுது அசாடிராக்டின் 1500 பி.பி.எம் மருந்தினை ஹெக்டேருக்கு 2.5 லிட்டர் வீதம் அல்லது வேளாண்மை துறை மூலம் பரிந்துரைக்கப்பட்ட பிற பூச்சிகொல்லி மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மேற்கண்ட ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 50 சதவீத மான்ய தொகையாக ஹெக்டேருக்கு ரூ.2000 பின்னேற்பு மான்யமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்திற்க்காக பெரம்பலூர் மாவட்டத்திற்க்கு 17ஆயிரத்து 400 ஹெக்டர் இலக்கீடாக வழங்கப்பட்டு ரூ.348 லட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் தொடர்ச்சியாக கவுல்பாளையம் கிராமத்திலும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மக்காசோள படைப்புழு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல்விளக்க திடலினை ஆய்வு செய்து பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டு பொருளாதார சேத நிலைக்கு மிகாமல் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்மை துறை களப்பணியாளர்களுக்கும் அறிவுறை வழங்கி மேலும் விரிவாக்க பணியாளர்கள் படைப்புழு தாகுதல் தொடர்பாக தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளவும் அறிவுரை வழகினார்கள். பின்னர் பெரம்பலூர் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மான்ய விலையில் ரொட்டவேட்டர், மற்றும் கைதெளிப்பான் கருவிகளை வழங்கினார்.

இந்த ஆய்வில் பெரம்பலூர் மாவட்ட இணை இயக்குநர் கருணாநிதி, சென்னை வேளாண்மை இயக்குநரக வேளண்மை துணை இயக்குநர் (மானாவாரி நில மேம்பாட்டு திட்டம்) சுந்தரம், பெரம்பலூர் வேளாண்மை துணை இயக்குநா; (உழவர் பயிற்சி நிலையம்) கீதா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக உதவி பேராசிரியை யசோதா மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குநர்கள், வேளாண் அலுவலர்கள், துணை மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!