AIADMK brought people in school buses to the meeting in violation of rules: Police unable to take action!
பெரம்பலூரில் இன்று, அதிமுக சார்பில், திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சரக்கு வாகனங்களில், ஆட்களை ஏற்றி வரக் கூடாது என்ற உத்தரவும் இருக்கிறது.
அதே போல் பள்ளி பேருந்துகள், பள்ளி வாகனங்களை, பள்ளி உபயோகங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு உபயோகத்திற்கு பயன்படுத்த கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால், செந்துறை அதிமுக ஒன்றிய செயலாளர் உதயம் ரமேஷ் தனது பகுதி ஆதரவாளர்களை செந்துறை நல்லாம்பாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி வாகனத்தில் சட்டத்திற்கு புறம்பாக கட்சியினரை ஏற்றி வந்தார்.
வழக்கமாக போலீசார் அப்பாவிகளிடம் மட்டுமே சின்சியார்ட்டியை காட்டுவார்கள். ஆனால், கரைவேட்டிகளை கண்டால் கண்டும். காணாமல் இருந்து விட்டு விடுகின்றனர்.
இந்த சம்பவம் நடப்பவை அனைத்தும் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் பகுதி என்பதோடு, பாஜக கட்சி கூட்டத்திற்கும், இதே போன்று நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.