AIADMK General Secretary Edappadi Palaniswami must apologize to 108 workers on a public platform, otherwise a statewide protest will be held; 108 Ambulance Workers’ Association announces!
தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில இணை தலைவர், ஜெயராஜ் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 108 தொழிலாளர்கள் மனு அளித்தனர். அப்போது அவர்கள் தெரிவிக்கும் போது, கடந்த ஆகஸ்ட்.18 ஆம் தேதி வேலூர் மாவட்டம் அனைக்கட்டு பகுதியில் அ.தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி
பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் கூட்டத்தில் மாட்டிக் கொண்டதால் அதை கவனித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிச்சாமி 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பார்த்து (நோயாளி) ஆளில்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் இனி ஒட்டி வருகிற டிரைவரை அதில் நோயாளியாக போகிற நிலைமை வரும் என்று ஆம்புலன்ஸ் ஓட்டுரை அச்சுறுத்தும் விதமாக தெரிவித்துள்ளார், கூட்டத்தில் உள்ளவர்கள் 108 ஓட்டுனரின் ஐடி கார்டு மற்றும் அவர்களது செல்போனை இழுத்து பறிக்க முயன்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து 108 தொழிலாளர்களிடம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த மனுவின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொது மேடையில் 108 தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்பதையும், மேலும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி தமிழக அரசு பணி பாதுகாப்பினை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர் தமிழ்நாடு 108 அவசர உறுதி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சுரேஷ் மற்றும் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.