Perambalur: Car collides with a parked truck Accident: One killed; 5 injured!

சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் சேகர் மகன் பிரேம்குமார்(30), இவருடைய நண்பர்களான சதீஷ்குமார்(39), அருண்(27), கண்ணன்(35), ஆகியோருடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தங்களுக்கு சொந்தமான காரில் சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்று முருகன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, அதே காரில் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். கார் பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 2.30 மணி அளவில் 4 ரோடு மேம்பாலம் அருகே வந்தபோது பழுதாகி நின்ற லாரியின் பின்னால் எதிர்பாராமல் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த திடீர் சாலை விபத்தில், கார் டிரைவரான சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த பன்னீர்தாஸ் மகன் விக்னேஷ்(29), மற்றும் காரில் பயணம் செய்த பிரேத்குமார், சதீஷ்குமார், அருண், கண்ணன் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்து இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர். இது குறித்த தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் விபத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி கார் டிரைவர் விக்னேஷ் இன்று காலை 6 மணி அளவில் உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், கார் ஓட்டுநர் விக்னேஷ் கண்ணயர்ந்து தூங்கியதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்திருக்கிறது. இது போன்ற துயர விபத்துகளை தவிர்க்க, நெடுந்தூரம் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் உரிய ஓய்வும் தூக்கத்தை எடுத்துக் கொள்வது நல்லது.








kaalaimalar2@gmail.com |
9003770497