Perambalur: “Taking a rest is not what matters to me; giving my absolute best is what counts”—Candidate’s daughter campaigns for votes by highlighting her father’s achievements over the past decade!

பெரம்பலூர் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் களம் காணுகிறார். நேற்று பெரம்பலூர் நகரில், ஆலம்பாடி சாலை, திருநகர், மதரஸா ரோடு, டால்பின் நகர், வடக்கு மாதவி ரோடு, உழவர் சந்தை, ராம் தியேட்டர், காமராஜர் வளைவு, ரோஸ் நகர், ரோவர் ஆர்ச், ரோவர் ஸ்கூல் பின்புறம், புதிய பேருந்து நிலையம், கே.ஜி.எம். நகர், தீரன் நகர் பகுதிகளில் நகரச் செயலாளர் ஆர்.ராஜபூபதி ஏற்பாட்டில் நடந்தது. அதில் கலந்து கொண்ட வேட்பாளர் தமிழச்செல்வனின் மகள் தமிழ்யாழினி தந்தைக்காக மைக் பிடித்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் (தமிழ்யாழினி) பேசியதாவது: “எங்கப்பா எங்களோடு செலவிட்ட நேரத்தை விட, உங்களோடு உங்களில் ஒருவராக உங்கள் இன்ப துன்பங்களில் பங்கேற்று செலவிட்ட நேரம் தான் அதிகம். அப்போ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்களப்பா அப்படின்னு சொன்னா கூட, ‘இல்லம்மா எனக்கு ரெஸ்ட் எடுக்கறதெல்லாம் முக்கியம் இல்ல, என்னை நம்பி வாக்களித்த என் பெரம்பலூர் மக்களுக்கு என் பெஸ்ட்ட கொடுக்கறது தான் முக்கியம்’ அப்படின்னு உங்களுக்காக அயராது பாடுபட்டவர், மீண்டும் ஒருமுறை உங்களுக்காக உழைக்க ஒரு வாய்ப்பு கேட்டு வந்து கொண்டிருக்கிறார்.”

“நமது பெரம்பலூர் தொகுதி முழுக்க 5 அடுக்கு கொண்ட அரசு தலைமை மருத்துவமனை, தாய் சேய் நல சீமான் கட்டிடம், அரசு கலைக்கல்லூரி போன்ற பல்வேறு நலத்திட்டங்களை நமக்காக பெற்றுத்தந்திருக்கிறார் நமது வெற்றி வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் அவர்கள்.”

“அவருக்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கண்ட வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, மூன்றாம் முறையாக சட்டமன்றத்திற்கு அனுப்பி நமது பெரம்பலூரில் நல்லாட்சி மலர்ந்திட இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே! இரட்டை இலைக்கே! இரட்டை இலைக்கே!” என அவர் பேசினார்.

முன்னதாக பேசிய வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் பேசியதாவது: “அன்பிற்குரிய வாக்காளர் பெருங்குடி மக்களே! உங்களுடைய பொன்னான வாக்குகளை, முத்தான வாக்குகளை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் முத்திரையிட்டு, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இன்றைக்கு ஓங்கி உயர்ந்து உங்கள் எதிர்ப்புறம் நின்று கொண்டிருக்கிற அரசு தலைமை மருத்துவமனை, புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சிக் காலத்திலே, புரட்சித் தமிழர் எடப்பாடியாருடைய ஆட்சிக் காலத்திலே, இத்தொகுதி மக்கள் பல்வேறு சுகாதார வசதிகளைப் பெற வேண்டும் என்பதற்காகச் சேய் நல மருத்துவக் கட்டிடம், MRI ஸ்கேன் வசதி கொண்டு வந்து இப்பகுதி மக்களுக்குச் சுகாதார வசதியை ஏற்படுத்தித் தந்தோம்.

மீண்டும் பல வளர்ச்சிப் பணிகளைக் கொண்டு வர உங்களுடைய பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் முத்திரையிட்டுப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு உங்களைப் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்!” என பேசினார்.

பிரச்சாரத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்தும், வேட்பாளர் தமிழச்செல்வன் 10 ஆண்டுகளாக சட்ட மன்ற இருந்த போது செய்த சாதனைகள் குறித்த துண்டுபிரசுரங்களையும் வழங்கி இரட்டை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த கட்சியினர் திராளக கலந்து கொண்டனர். வேட்டுகள் முழங்க வரவேற்பும், பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வாழ்த்தினர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!