Perambalur: Blood donation camp for government officials; Collector inaugurates the camp by being the first to donate blood.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இணைந்து நடத்திய அரசு அலுவலர்களுக்கான ரத்த தான முகாமினை கலெக்டர் ஷரண்யா முதல் நபராக ரத்தம் வழங்கி தொடங்கி வைத்தார் .

மனித நேயத்தின் வெளிப்பாடாக விளங்கும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இணைந்து நடத்திய ரத்த தான முகாமில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் இதர அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் காவல்துறையினர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இதில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பல உயிர்களை காக்கும் வகையில் தங்களது ரத்தம் தானம் செய்தனர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் ரத்த தான முகாம் நடைபெறுகிறது சரவணன் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!