Kunnam: Candidate Names a Child During Campaign; IJK Candidate Saranya Solicits Votes by Promising to Waive Loans Taken by Farmers from Cooperative Banks!

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சரண்யா அன்பழகன், இன்று வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டிக்குடிக்காடு, பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து மேலகாளிங்கராயநல்லூர், பள்ளகாலிங்கராய நல்லூர் பிரச்சாரம் செய்தார். மேற்கொண்டார்
அதிமுக வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி தலைமையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார், முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம், அதிமுக முன்னாள் எம்.பி சந்திரகாசி, வேப்பூர் முன்னாள் யூனியன் சேர்மன் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்குகளை சேகரித்தனர். பள்ள காலிங்கராய நல்லூர் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர்சரண்யா, அப்பகுதியில் வசிக்கும் ஆல்வின் மாயா – பிரகலாதன் தம்பதியரின் ஆண் குழந்தைக்கு மகிழன் எனப் பெயர் சூட்டினார்.
பின்னர், அதிமுக ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய சிறு,குறு கடன் ரத்து, ரேசன் கடையில் தரமான அரிசி, மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் உதவித்தொகை, ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம், தாலிக்கு தங்கம் போன்ற அதிமுகவின் 2026 சட்ட மன்ற தேர்தல் அறிக்கையை எடுத்துரைத்து அவர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
தொடர்ந்து, வேள்விமங்கலம், கீழப்பெரம்பலூர், கைப்பெரம்பலூர், கிழுமத்தூர், குடிக்காடு, அத்தியூர், பழைய அரசமங்கலம், வடக்கலூர், கத்தாழைமேடு, வ.அகரம், கிளியூர், சாத்தநத்தம், நன்னை, பூங்கா நகர், கோவிந்தராஜப்பட்டினம் உள்ளிட்ட பல கிராமங்களை வாக்குகளை சேகரித்தார்.










kaalaimalar2@gmail.com |
9003770497