Perambalur: National Lok Adalat: 394 cases settled; awards totaling ₹4.32 crore passed.

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான எல்.எஸ்.சத்தியமூர்த்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.
குடும்ப நல நீதிமன்றம் மாவட்ட நீதிபதி வி.ஆனந்தன் மற்றும் சார்பு நீதிபதி .கே.மோகனபிரியா ஒரு குழுவாகவும், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முரளிதரகண்ணன் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி டி..தன்யா ஒரு குழுவாகவும், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.1 வி.சி.தாரிணி, குற்றவியில் நீதித்துறை நடுவர் எண்.2 ஹெச்.கவிதா உட்பட தாலுகா நீதிமன்றங்களில் உள்ள குன்னம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவரும் வட்ட சட்டப்பணிகள் குழுக்களின் தலைவருமான ஆர்.ராஜசேகரன் மற்றும் வழக்கறிஞர் ஆர். ராமகிருஷ்ணன் ஒரு குழுவாகவும், வேப்பந்தட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவரும் வட்ட சட்டப்பணிகள் குழுக்களின் தலைவருமான தெய்வீகன் மற்றும் வழக்கறிஞர் வேல்முருகன் ஒரு குழுவாகவும் அமைத்து செயல்பட்டனர்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள். பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நீதிமன்றத்தில் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் குடும்பநல நீதிமன்ற வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வருவாய்துறை, மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் வங்கி வாரக்கடன் வழக்குகள் உட்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் வழக்காடிகள், எதிர் வழக்காடிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை வரவழைத்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் பேசி 394 வழக்குகள் முடிவுற்றது.
பெரம்பலூரைச் சேர்ந்த கலைவாணி என்பவரின் கணவர் வாகன விபத்தில் பலியானதையொட்டி மோட்டார் வாகன விபத்து வழக்கில் தனியார் காப்பீட்டு நிறுவனத்தை வரவழைத்து சமரசமாக பேசி கலைவாணி மற்றும் மகன், மகள், மாமியார் மூவருக்கும் இழப்பீட்டுத் தொகையாக ரூ.85 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. முருக்கன்குடியைச் சேர்ந்த பிரசன்னா என்பவர் வாகன விபத்தில் காயமுற்று நஷ்டஈடு கோரிய வழக்கில் அவரது தந்தை ராமலிங்கம் என்பவர் ரூ.70 லட்சம் நஷ்டஈடாக யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டது. மேலும், மோட்டார் வாகன விபத்து, காசோலை மோசடி வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் உட்பட இழப்பீட்டுத் தொகை ரூ.4 கோடியே 31 லட்சத்து 70 ஆயிரத்து 600-க்கான உத்தரவை ஆணை தேசிய மக்கள் நீதிமன்றம் முன்பாக முதன்மை மாவட்ட நீதிபதி சத்தியமூர்த்தியால் வழங்கப்பட்டது.
வழக்கறிஞர்கள், வழக்காடிகள், எதிர் வழக்காடிகள், பொதுமக்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து முன் ஏற்பாடுகளையும், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சரண்யா செய்திருந்தார்.










kaalaimalar2@gmail.com |
9003770497