Perambalur: Rain accompanied by strong winds; opportunity to sow rain-fed crops—missed during the Aadi season—in the coming days.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் உள்பட பல்வேறு இடங்களில் இன்று மாலை 6.30 மணியளவில் பலத்த காற்றுடன் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. இதனால், பொதுமக்கள் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர். மேலும், ஆடிப்பட்டத்தில் விதைக்க வேண்டிய மானாவாரி சாகுபடி பயிரான பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் நடப்பு ஆண்டிற்கு விதைக்கப்படாமல் பெரும்பாலான கிராமங்களில் கிடப்பில் உள்ளது. மேலும், பாசன வசதி கொண்ட விவசாயிகள் மட்டுமே ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்துள்ளனர். ஆடி மாதம் தேவையான அளவு மழை பெய்யாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மானாவாரி சாகுபடி பணிகள் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து ஓரீரு நாட்கள் மழை பெய்தால் விதைப்பு பணி விறுவிறுப்படைய வாய்ப்புள்ளது. கால்நடை தேவையான தண்ணீர், குளம் குட்டையில் தேங்கவும் வாய்ப்புள்ளது. மேய்ச்சலில் புல் வகைகள் வளரும் என மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெப்பத்தால் வாடிய மக்களும் தீடீர் மழை குளிர்ச்சியால் மகிழ்ந்துள்ளனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497