Perambalur: An introductory meeting for the VCK’s education and economic awareness campaign was held, presided over by District Secretary Krishnakumar.

பெரம்பலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாதார விழிப்புணர்வு இயக்க அறிமுக கூட்டம் மாவட்ட செயலாளர் ந. கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது. கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில செயலாளர் ஜான்சிராணி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார். மேற்கு நகர செயலாளர் தங்க இளவரசன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பிச்சைப்பிள்ளை, மாவட்ட செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் அழகுமுத்து, மாவட்ட துணைச் செயலாளர்கள் வெற்றியழகன், தங்க சண்முக சுந்தரம், மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் செல்வாம்பாள், மு.மா.க மாநில துணைச் செயலாளர் அம்பேத் கோகுல், க.பொ.வி.இ மாநில துணைச் செயலாளர் அண்ணாதுரை, முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பொன்பால்ராஜ், ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர பொறுப்பாளர் அழகுதாசன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் காட்டு ராஜா, மாவட்ட அமைப்பாளர் பிச்சைப்பிள்ளை, ஒன்றிய பொறுப்பாளர் சோழன், முற்போக்கு மாணவர் கழகத்தை சேர்ந்த ரவிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் சக்தி பாலன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கத்தின் மாவட்ட துணை அமைப்பாளர் சத்தியசீலன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!