Perambalur: Sports competitions for persons with disabilities; Collector shares details!

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி 29.10.2026 அன்று நடைபெற உள்ளது. 12 வயது முதல் 14 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு -100மீ ஓட்டப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதலும் 15 வயது முதல் 17 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 200 மீ ஓட்டப்பந்தயம் மற்றும் குண்டு எறிதலும்,, 17 வயதிற்கு மேற்பட்டோர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 400 மீ ஓட்டப்பந்தயமும் , 17 வயதிற்கு மேற்பட்டோர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 100 மீ தொடர் ஓட்டப்பந்தயம் ஆகிய விளையாட்டு போட்டிகள் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான விளையாட்டு போட்டிகள் ஆகும்.

12 வயது முதல் 14 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நின்று நீளம் தாண்டுதலும், 15 வயது முதல் 17 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு குண்டு எறிதலும், 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வட்டத் தட்டு எறிதலும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சிறப்பு பள்ளிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு குண்டு எறிதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் முற்றிலும் பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான விளையாட்டு போட்டிகள் ஆகும்.

12 வயது முதல் 14 வயது வரை ஆண்களுக்கு -100 மீ மற்றும் பெண்களுக்கு -50 மீ; ஓட்டப்பந்தயமும், 15 வயது முதல் 17 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 100 மீ ஓட்டப்பந்தயமும், 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு -200 மீ மற்றும் பெண்களுக்கு – 100 மீ ஓட்டப்பந்தயமும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள், சங்க உறுப்பினர்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 100 மீ ஓட்டப்பந்தயம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் குறைந்த பார்வைதிறன் பாதிக்கப்பட்டவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் ஆகும்.

12 வயது முதல் 14 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு காலிப்பர் மற்றும் கால் தாங்கி உதவியுடன் நடப்பவர்களுக்கு நடைபோட்டி 50 மீ,  15 வயது முதல் 17 வயது வரை ஆண்களுக்கு -150 மீ  மற்றும் பெண்களுக்கு -100 மீ மூன்று சக்கர வண்டி ஓட்டப்பந்தயமும், 17 வயதிற்கு மேற்பட்டோர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சக்கர நாற்காலியில் 75 மீ ஓட்டப்பந்தயம் ஆகிய விளையாட்டு போட்டிகள் கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டோருக்கான விளையாட்டு போட்டிகள் (உதவி உபகரணங்கள உதவியுடன்) ஆகும்.

12 வயது முதல் 14 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 50 மீ ஓட்டப்பந்தயமும், 15 வயது முதல் 17 வயது வரை ஆண்களுக்கு -100 மீ மற்றும் பெண்களுக்கு -75 மீ ஓட்டப்பந்தயமும், 17 வயதிற்கு மேற்பட்டோர் ஆண்களுக்கு -200 மீ மற்றும் பெண்களுக்கு -100 மீ ஓட்டப்பந்தயம் ஆகிய விளையாட்டு போட்டிகள் கை, கால் இயக்க குறையுடையோருக்கான விளையாட்டு போட்டிகள் ஆகும்.

12 வயது முதல் 14 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நின்று நீளம் தாண்டுதல் போட்டியும், 15 வயது முதல் 17 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓடி நீளம் தாண்டுதல் போட்டியும், 17 வயதிற்கு மேற்பட்டோர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 100 மீ ஓட்டப்பந்தயம் ஆகிய விளையாட்டு போட்டிகள் அறிவுசார் குறையுடையோருக்கான விளையாட்டு போட்டிகள் ஆகும்.

12 வயது முதல் 14 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உருளைக்கிழங்கு சேகரித்தல் போட்டியும், 15 வயது முதல் 17 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கிரிக்கெட் பந்து எறிதல் போட்டியும், 17 வயதிற்கு மேற்பட்டோர் ஆண்கள் மற்றும் பெண்கள் தடை தாண்டி ஓடுதல் ஆகிய போட்டிகள் ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் ஆகும்.

12 வயதிற்கு குறைவான வயதுடைய மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்டத்திலேயே பரிசுகள் வழங்கப்படும். 12 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டியில் முதலிடத்தில் வந்தவர்கள் மட்டும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு அனுப்பப்படும். எனவே, இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறும் மாற்றுத்திறனாளி வீரர்கள் அனைவரும் தங்களுடைய தேசிய அடையாள அட்டை, பாஸ்போட் சைஸ் புகைப்படம் -02 மற்றும் ஆதார் அட்டையுடன் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் ப.அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!