Perambalur: Elderly man dies after removing a fallen power line!

பெரம்பலூர் அருகே உள்ள இரூர் கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் மகன் நல்லேந்திரன் (70) விவசாயி. இவர் இன்று தனது வயலில் சின்ன வெங்காயம் அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது, வயலில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை துண்டு வைத்து இழுத்து அகற்ற முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிதம்பரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மின்வாரிய பணியாளர்கள் அறுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்தி சீரமைத்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497