Perambalur: Fodder-chopping machines available at a 50% subsidy; Collector’s announcement!

பெரம்பலூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2026-27-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள தீவன அபிவிருத்தி திட்டத்தில் மின்சார உதவியுடன் இயங்கும் புல் நறுக்கும் கருவி, 20 பயனாளிகளுக்கு 50 சதவீத அரசு மானியத்திலும், 50 சதவீதம் பயனாளிகள் பங்குத் தொகையுடன் வழங்கப்பட உள்ளது. குறைந்தபட்சம் 2 மாடுகள், 0.25 ஏக்கர் தீவனப்புற்கள் பயிரிடும் நிலை கொண்டவராக இருக்கவேண்டும். 50 சதவீத தீவனப்புல் கருவிக்கான பங்குத்தொகை பயனாளி செலுத்தவேண்டும். ஏற்கனவே இத்திட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பயன்பெற்றவராக இருத்தல் கூடாது. இதில் சிறு குறு விவசாயிகள், ஆவின் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களைப் பெற்று உரிய படிவத்தில் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், ஆதார் அட்டை நகல் கைப்பேசி எண், தங்கள் பெயரில் உள்ள நிலத்திற்கான சான்று மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றோடு விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.









