Perambalur: 5% incentive for municipal taxpayers; Commissioner Leemasen makes the announcement!

பெரம்பலூர் நகராட்சி கமிசனர் லீமாசென் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: 2026 27ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி தொகையினை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 பிரிவு 84 (1 )ல் அரையாண்டு தொடங்கிய தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் சொத்து வரியினை செலுத்துபவர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட வரிவிதிப்பு தாரர்களால் செலுத்தப்படும் நிகர சொத்து வரியில் 5% ஊக்கத் தொகையாக வழங்கப்படும் எனவும், பெரம்பலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட 21 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் / சொத்து உரிமையாளர்கள் தங்களது 2026 -27 ஆம் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை வரும் 31ஆம் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் ஊக்கத்தொகையாக பெற தகுதி உடையவர் ஆகிறார்கள் எனவே, பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி தொழில்வரி காலி மனை வரி குடிநீர் கட்டணம் பாதாள சாக்கடை கட்டணம் குத்தகை இனங்களுக்கான கடை வாடகை ஆகியவற்றினை உடனடியாக செலுத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

வரி மற்றும் வரி இல்லா இனங்களின் தொகையினை செலுத்துவதற்கு ஏதுவாக சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலும் நகராட்சி கணினி வசூல் மையம் செயல்படும் பொதுமக்கள் வரி மற்றும் வரி இல்லா இனங்களை ஆன்லைன் மூலம் செலுத்துவதற்கு http://tnurbanepay.in.gob.in/ என்ற இணையதளம் மூலமாக நேரடியாகவும் வரிகளை செலுத்தலாம், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!