Perambalur: The portrait unveiling ceremony for former DMK District Secretary Kunnam C. Rajendran will be held tomorrow; DMK Deputy General Secretary A. Raja and Principal Secretary K.N. Nehru will participate.

பெரம்பலூர் மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளராகவும், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளராகவும், வேப்பூர் ஒன்றிய முன்னாள் திமுக செயலாளராகவும், முன்னாள் மாவட்ட ஊராட்சி சேர்மனாகவும் பதவிகள் வகித்த குன்னம் சி.ராஜந்திரன் காலமானார். அவரது படத்திறப்பு விழா நாளை காலை (அக்.15- வியாழக்கிழமை) பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள முத்துக் கிருஷ்ணா மக்கள் மன்றத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா தலைமையில் நடக்கிறது. மறைந்த குன்னம் சி.ராஜேந்திரனின் திருவுருவப்படத்தை திமுக முதன்மைச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான கே.என்.நேரு திறந்து வைக்கிறார். முன்னாள் அமைச்சர் சிவசங்கர், பெரம்பலூர் எம்.பி அருண்நேரு மற்றும் பெரம்பலூர் திமுகவை சேர்ந்த பல முக்கிய பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கினைக கழக நிர்வாகிகள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என பலர் திரளாக கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆர். ராமதிலகம், மற்றும் செந்தில்நாதன் – அமுதா, வெற்றிவேல் – விஜயபிரியா, ரமேஷ் ராஜேந்திரன் – சந்திரலேகா ஆகியோர் செய்து வருகின்றனர்.








