Perambalur: Power outage announced at Koothur substation!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கூத்தூர் துணைமின் நிலையத்தில் அக்.16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் பெறும் அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர். நல்லூர், ஜமீன் பேரையூர், கூத்தூர், கூடலூர், கொளத்தூர், ராமலிங்கபுரம், அல்லிநகரம், திம்மூர், மற்றும் மேத்தால் ஆகிய கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என்பதை கூத்தூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்








