Perambalur: Free coaching classes for Group 4 exam; Collector announces!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கையில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV தேர்விற்கு 6574 காலி பணியிடங்களுக்குரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேரடி பயிற்சி வகுப்பு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 22.10.2026 முதல் தொடங்கப்பட உள்ளது. 18 வயது முதல் வயது உச்ச வரம்பின்றி (60 வயதுக்குட்பட்ட) பத்தாம் வகுப்பு முடித்த வேலை நாடுநர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு கட்டண சலுகை கோராத தேர்வர்கள் ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக செலுத்தப்பட வேண்டும். www.tnpscexams.in இணையதளம் வாயிலாக 05.11.2026 வரை இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு 10.01.2027 அன்று நடைபெறவுள்ளது.

இந்ம போட்டித் தேர்விற்கான பயிற்சி வகுப்பு வார வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை வகுப்புகள் நடைபெறும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.மாதிரி தேர்வுகள் முடிந்தவுடன் வினாக்கள் குறித்து குழு விவாதம் மற்றும் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும்.போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் பிரத்யேக இணையதளமான Virtual Learning Portal–ல் போட்டித்தேர்வு ஆர்வலர்களுக்கு பதிவு செய்து தரப்படும்.போட்டித் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி.கடந்த ஐந்து ஆண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட போட்டித்தேர்வு ஆர்வலர்கள் பல்வேறு தேர்வு நிலைகளில் வெற்றி பெற்று அரசு பணிகளில் இணைந்துள்ளனர்.

கடந்த 2025 ம் ஆண்டு நடைபெற்ற TNPSC GROUP – IV தேர்வில் 10 போட்டித் தேர்வு ஆர்வலர்கள் வெற்றி பெற்று அரசு பணியில் பணிபுரிந்து வருகின்றனர். இலவச பயிற்சி வகுப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு 94990 55913 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும், 01.11.2026 அன்று நடைபெற உள்ள TNPSC Group – II & IIA முதனிலை தேர்வினை எளிமையாக அணுக ஏதுவாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் மாநில அளவில் மாதிரி தேர்வுகள் 21.10.2026 மற்றும் 28.10.2026 ஆகிய தேதிகளில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. எனவே, அரசு பணியில் சேர ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!