Perambalur: Panchayat President submits petition to Collector and SP seeking protection for the Panchayat Secretary.

பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி ஊராட்சி செயலர் மீது புகார் கொடுத்ததால் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாதுகாப்பு கேட்டு கலெக்டர், போலீஸ் எஸ்.பியிடம் மனு கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் அருகேயுள்ள சில்லக்குடி கிராமத்தில் கடந்த 2001 முதல் 2011 வரை தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் மேத்தால் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம்.
இந்நிலையில் தற்போது சில்லக்குடி ஊராட்சியின் செயலராக இருக்கும் ராஜசேகர் என்பவர், ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களை கொண்டு பணிகளை செய்யாமல், ஜேசிபி இயந்திரம் மூலம் வேலை செய்து அதற்குண்டான வாடகையை 100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து கொடுத்தாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான பன்னீர்செல்வம், துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளார். இதனையறிந்த ராஜசேகர் அடிக்கடி பன்னீர் செல்வத்திற்கு தொலைபேசி மூலமாக மிரட்டல் விடுத்து வந்துள்ளார். மேலும் பன்னீர்செல்வம், ஆட்சியரிடம் புகார் கொடுத்ததை தொடர்ந்து மேலும் தகாத வார்த்தைகளால் திட்டிய, ஊராட்சி செயலர் ராஜசேகர், கொலை செய்து விடுவதாக பன்னீர்செல்வத்தை மிரட்டி உள்ளார்.

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பன்னீர்செல்வம் இன்று மாலை புகார் மனு கொடுத்துள்ளார். புகார் மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி ஆகியோர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என் உறுதி அளித்துள்ளனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!