Perambalur: Power outage announced at Kai.Kalathur Sub-Power Station!

பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை செப்.8ம் தேதி- திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அங்கிருந்து மின்வினியோகம் பெறும், கை.களத்தூர், சிறுநிலா, நெற்குணம், நூத்தப்பூர், அய்யனார்பாளையம், காரியானூர், பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்திநகர் ஆகிய ஊர்களில் அன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார விநியோகம் இருக்காது, கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!