Perambalur: Sanitation workers stage a siege and sit-in protest demanding the payment of the wages announced by the municipality; MLA Sivakumar conducts an on-the-spot inquiry, leaving the contractor flustered.

பெரம்பலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் வாகன இயக்குனர்கள் கொசு மருந்து அடிப்பவர்கள் என மொத்தம் 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர் மூலம் பணி வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு அறிவிக்கப்பட்ட கூலி வழங்க வேண்டும் பிஎப், இஎப் பிடித்த முறையாக செய்ய வேண்டும் மரியாதையுடன் வழி நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நகராட்சி தூய்மை பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் இன்று காலை பணி புறக்கணிப்பு செய்து நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் தூய்மை பணியாளர் உடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கை பற்றி கேட்டறிந்தார். தொடர்ந்து இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம், சட்டமன்ற உறுப்பினரும், தூய்மை பணியாளர்கள் ஊதியம் பற்றி கேட்டபோது ஒப்பந்ததாரர் இதற்கு சரியான பதில் கூறால் மழுப்பலாக பதில் அளித்தார், இதனைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்ததாரரிடம் சரமாரிய கேள்விகளை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கையில், முறையாக தங்களுக்கு அறிவிக்கப்பட்ட 780 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால், 357 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. மீதி பணம் வாகன பராமரிப்பு செலவு பெட்ரோல் செலவு என கூறுகிறார்கள் எங்களது ஊதியத்தில் பராமரிப்பு பணிக்கு செலவு செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது அறிவிக்கப்பட்ட கூலியை வழங்க வேண்டும். நிறுவனத்தின் பங்கு வழங்கப்படாமல் உள்ளது. அதனை வழங்க வேண்டும், மேலும், தங்களை மரியாதை உடன் வழி நடத்த வேண்டும், இவற்றை சரிவர செய்து தரவில்லை என்றால் விரைவில் முதல்வரை சந்தித்த குறைகளை தெரிவிக்க உள்ளதாகவும், தற்போது முதல் கட்டமாக மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497