Perambalur: Head-on collision between lorry and car; 3 dead!

பெரம்பலூர் – துறையூர் சாலையில் அடைக்கம்பட்டி கிராமத்தில் இன்று காலை சுமார் 6.00 மணி அளவில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட திடீர் விபத்தில் பெரம்பலூரில் இருந்து துறையூரை நோக்கி சென்ற லாரியும், துறையூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த காரும் விபத்திற்குள்ளானது. இதில், 3 பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தனர். இது குறித்த தகவல் அறிந்த பெரம்பலூர் ரூரல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை துறையூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

விபத்தில் பெரம்பலூர் பாரதி நகரை வேலு மகன் சங்கர் (37) மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரிசானத்தம் கிராமததை சேர்ந்த வேலாயுதம் மகன் விஜய் (30), அரியலூர் மாவட்டம் சன்னாநல்லூரை சேர்ந்த மருதமுத்து மகன் சக்தி (21). 3 பேரையும் சடலங்களாக மீட்டனர். தெலுங்கானவை சேர்ந்த லாரி டிரைவர் ஜலீல் பாஷா ஷேக் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!