Perambalur: Two cows die after stepping on power lines snapped by strong winds!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட நாட்டார்மங்கலம், ஆலத்தூர், இரூர், புதுக்குறிச்சி, காரை, கொளத்தூர் ஆகிய இடங்களில் மழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சில இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்தது. மின் கம்பிகளும் அறுந்து விழுந்தன.

இந்நிலையில் கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராசு (65). என்பவர் தனது 2 பசுமாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்த போது வீசிய பலத்த காற்றால் மின் கம்பிகளை மிதித்த 2 பசுமாடுகளும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தன. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கமலஹாசன் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மருவத்தூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு அரசு சார்பில் நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!