Perambalur: Police Commemoration Day observed under the leadership of the SP!

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் எஸ்.பி வி.லலித்குமார் தலைமையில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாரதிதாசன் (தலைமையிடம்), மாவட்ட நிர்வாக உயர் அதிகாரிகள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் தங்கள் சீருடையில் கருப்பு ரிப்பன் அணிந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது உரையாற்றிய எஸ்.பி கடந்த ஆண்டில் நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது உயிர் நீத்த காவலர்களின் பெயர்களை நினைவு கூர்ந்தார். பின்னர், 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.










kaalaimalar2@gmail.com |
9003770497