Perambalur: Government begins sale of fine-variety rice at Rs. 30 per kg!

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட ராஜா தியேட்டார் பின்புறம் பெரம்பலூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை
பண்டகசாலையில் கூட்டுறவு துறையின் சார்பில் அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30 சன்னரக அரிசி விற்பனையினை கலெக்டர் ப.அப்துல் ராசிக், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் இன்று (21.10.2026) தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 8 மெட்ரிக் டன் சன்னரக அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ வீதம், மொத்தம் 1,600 குடும்பங்கள் நேரடியாகப் பயனடைவார்கள். வெளிச்சந்தையைக் காட்டிலும் மிகவும் குறைவான விலையில், கிலோ ரூ.30 என்ற விலையில் அரிசி மக்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், புழுங்கல் பொன்னி அரிசி ஒரு கிலோ ரூ.60-க்கும், துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.130-க்கும், உளுத்தம் பருப்பு ஒரு கிலோ ரூ.140-க்கும், பூண்டு மற்றும் மல்லி (தனியா) ஆகியவை தலா ஒரு கிலோ ரூ.240 வீதமும், மிளகாய் ஒரு கிலோ ரூ.330-க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. ஆர்.டி.ஓ அனிதா உள்பட கூட்டுறவு சங்க பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!