Perambalur: VCK passes resolution demanding the construction of a community hall and a library in Udumbiyam!

பெரம்பலூர் மாவட்டம், உடும்பியம் கிராமத்தில் விசி கட்சியின் வேர்களைத் தேடிப் பயணம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை அமைப்பாளர் குமார் வரவேற்றார். மாவட்டத் துணைச் செயலாளர் வெற்றியழகன், மாவட்ட துணை அமைப்பாளர் அம்பேத், ஒன்றிய பொறுப்பாளர்கள் ரஞ்சித், நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், உடும்பியம் பஞ்சாயத்துக்குட்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு அவற்றை நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் வழங்கவும், உடும்பியத்தில், புதிதாக சமுதாயக்கூடம், புரட்சியாளர் அம்பேத்கர் பெயரில் நூலகம் அமைத்து தரவும், பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் அரசு பேருந்து வசதியை ஏற்படுத்த கொடுக்கவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிளைச் செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் சுரேஷ்குமார், துணைச் செயலாளர்கள் முத்துசாமி மற்றும் முருகேசன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை விமல் கிளைச் செயலாளர் பிரதீப், பொருளாளர் சிரஞ்சித், துணை செயலாளர்கள் மகேஸ்வரன்,சந்துரு, கிரண் மற்றும் மகளிர் விடுதலை இயக்கத்தின் கிளைச் செயலாளர் மலர்கொடி, பொருளாளர் கவிதா, துணைச் செயலாளர்கள், சங்கீதா, வேளாங்கண்ணி ஆகியோர் புதிய பொறுப்பாளராக தேர்வார்னர்கள். அவர்களுக்கு, மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து, கட்சியின் கொள்கை கோட்பாடுகளை விளக்கி பேசினார். மாநில செயலாளர் வீர செங்கோலன், மண்டல துணைச் செயலாளர் மன்னர் மன்னன், மாவட்ட பொருளாளர் பிச்சைப்பிள்ளை, பேரூர் செயலாளர் விஜயவர்மன், மாவட்ட அமைப்பாளர் ரவிசங்கர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.









