Netizens teased the Collector—who asked, “What do you like about Perambalur?”—by offering him some “advice” instead!

பெரம்பலூர் கலெக்டராக இருப்பவர் அப்துல் ராசிக். இவருக்கு முன்னபாக பணியில் இருந்த கலெக்டர் சரண்யா சோசியில் மீடியாவில் ஆக்டிவ்வாகவும், அவரே பொதுமக்களுக்கு பதிலை அளித்தார். தற்போது சோசியல் மீடீயா சரண்யாவிற்கு பிறகு தொய்வடைந்து கும்பகர்ணன் தூக்கத்திற்கு சென்று விட்டது. தற்போது கலெக்டர் அலுவலக பணியாளர்கள் ஏனோ தானோ பதிவிட்டும் வருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் Collector_Perambalur என்ற பக்கத்தில் பெரம்பலூர்னா.. உங்களுக்கு என்ன பிடிக்கும் ? என பதிவிட அதற்கு இன்ஸ்டா பாலோயர்கள் பல பதில்களை அளித்து கலாய்த்துள்ளனர்.
அவற்றில் சில…
பெரம்பலூர் டவுனில் உள்ள தெருக்களில் ரோடு எல்லாமே ரொம்ப மோசமா இருக்கு.. பைக் ஓட்ட முடியல தெருவையே நோண்டி போட்டுட்டு அப்படியே விட்டாச்சு அதை சரி பண்ணுங்க..
நல்ல கலெக்டர்! என்னென்ன குறை இருக்குனு கேக்கல!!. பெரம்பலூர எப்படி டெவலப் பண்றதுன்னு கேளுங்க!!
பக்கத்தை சரியாக பயன்படுத்துங்க!
பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதான பகுதியாக இருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் செல்லும் சாலையின் இருபுறமும் காலம் காலமாக குப்பைமேனாக திறந்து கிடக்கிறது அதை முதலில் சரி செய்யுங்கள்!
இது என்ன influencer பக்கமா! அல்லது மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர்களின் பக்கமா!! மாவட்டத்தின் தேவைகளை திட்டங்களை குறைகளை பேசுவதற்கு கோரிக்கை வைப்பதற்கு பதில் சொல்ல பயன்படுத்துங்கள் சார்!!
ஷேர் ஆட்டோவால் ட்ராபிக் பிரச்சனை!, தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி கடைகளால் பொது போக்குவரத்து இடையூறு!
நகர் வலம் வாங்க சார் அப்பத்தான் பொதுமக்கள் பிரச்சனை தெரியும், கலெக்டர் ஆபீசுக்குள் ஏசிக்குள் இருந்தால் இப்படித்தான் கேக்கத் தோணும் எனவும், நீ(ங்க) ஒரு (ஆர்ட்டிஸ்ட்) ஆட்சியர்னு நிரூபிச்சிட்டீங்க என ஜிபி முத்து கமெண்டு உள்ளிட்ட பல விதமாக கமெண்டுகளை பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது வைரலாக பேசப்படுகிறது.









