Perambalur: Special camp for gold and housing mortgage loans begins at Repco Bank! Offers announced!!

இந்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கி கடந்த 57 ஆண்டுகளாக 108 கிளைகளுடன் கடந்த 57 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவை அளித்து வருகிறது. மேலும், ரூ. 28 ஆயிரம் கோடி வர்த்தகத்தை கடந்து லாபகரமாக செயல்பட்டு வருகிறது. ரெப்கோவின் பெரம்பலூர் வங்கி கிளையில் சிறப்பு அடமானக் கடன் முகாம் தொடக்க விழா நடந்தது. இந்த முகாம் 21-10-2026 அன்று தொடங்கி 30-11-2026 வரை நடக்கிறது. இம்முகாமில் பங்கு பெரும் வாடிக்கையாளர்களுக்கு சேவைக் கட்டணத்தில் 50 பர்சன்டேஜ் சலுகை அளிக்கப்படும் என வங்கிக் கிளையின் முதன்மை மேலாளர் கார்த்திக் தெரிவித்தார். மேலும் டெபாசிட்களுக்கு மூத்த குடிமக்களுக்கு 8.10 சதவீதம் வட்டியும், பொதுமக்களுக்கு 7.60 சதவீதம் வட்டியும், தங்க நகைகடன் கிராமிற்கு – 10,800- வரை வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார். இதில் வங்கியின் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வங்கியின் பெரம்பலூர் பேரவைப் பிரதிநிதி கேசவன் மற்றும் உடையார் டீ ஸ்டால் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!