Perambalur: Vigilance police conduct surprise inspection at the District Town and Country Planning Office!

பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலகத்தில் விஜிலென்ஸ் போலீசார் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா தலைமையில் திடீரென இன்று மாலையில் சோதனையில் ஈடுபட்டனர். ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு மனைகளுக்கு அப்ரூவல் வழங்குவதற்கு விதிகளுக்கு உட்பட்டும், விதிகளை மீறி செய்வதற்கும், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் வீட்டு மனை உரிமையாளர்களிடம் இருந்து ஏதாவது லஞ்சம் பணம் அதிகாரிகள் பெற்றுள்ளனரா என UPI மற்றும் அங்கிருக்கும் அலுவலர்களிடம் இருக்கும் ரொக்கம் பணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை தமிழ்நாடு முழுவதும் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். விசாரணை முடிந்த முழுவிவரம் தெரிய வரும் என தகவல்கள் தெரியவருகின்றன. இச்சோதனை சம்பவம் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!