Perambalur: PMK leader Anbumani Ramadoss condoles the death of PMK District President Madhura Selvarasu Nattar; Tribute from party members!

பெரம்பலூர் மாவட்ட பாமக தலைவராக இருந்த மதுரா செல்வராசு. அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் மதுரா நகர் கிராமத்தை சேர்ந்தவர் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து அதில் பயணம் செய்து வந்துள்ளார். அதன் பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பொதுக்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக பெரம்பலூர் மாவட்டத்தில் பாமக மாவட்ட தலைவராக பயணம் செய்து வந்தார். உடல்நிலை குறைவால் நேற்று இயற்கை எய்தினார். அவருக்கு கட்சியினர் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் வைத்தி, பெரம்பலூர் பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார். ஒன்றிய செயலாளர்கள் சிவசூரியன், திருமுருகன், தனவேல்
உள்ளிட்ட பெரம்பலூர் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். பாமக தலைவர் அன்புமணி இரங்கல் செய்தி விடுத்திருந்தார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!