Perambalur: “Forget political parties—cast your vote for me and ensure my victory”; DMK candidate Jayalaxmi garnered votes on her native soil!

பெரம்பலூர் ஒன்றியத்தில் உள்ள எசனை, பாப்பாங்கரை, கீழக்கரை கிராமங்களில் வீதிவீதியாக இன்று காலை திமுக வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமி, மதசார்பற்ற கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். மக்கள் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். 42 ஆண்டுகளுக்கு பிறகு அவரது தாயர் சரோஜினி தங்காராசுக்கு அடுத்து பெண் வேட்பாளராக ஜெயலட்சுமி அதே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரது தாயார் போட்டியிட்டு பின்னடைவை சந்தித்தால், அந்த தேர்தலில் நடந்த இழப்பை ஈடுகட்ட 20 ஆண்டு காலம் ஆனது எனவும் தெரிவித்து இருந்தார்.

தலைமைக் கழக பேச்சாளர் எசனை ஆறுமுகம் பேசியதாவது: வேட்பாளர் ஜெயலட்சுமி, நம்மூரில் பிறந்தவர். “எல்லாருக்கும் நல்லா அறிமுகமானவங்கதான். அவங்க கால் படாத இடமே இல்லை. ரொம்ப காலத்துக்குப் பிறகு நம்ம ஊருக்கு ஒரு எம்.எல்.ஏ கிடைச்சிருக்காங்க. இந்த எம்.எல்.ஏ கிட்ட போறதுக்கு யார் பரிந்துரையும் தேவையில்லை. ஏன்னா எல்லாருக்கும் நல்ல அறிமுகமானவர்தான் நம்ம ஜெயலட்சுமி, அவங்க அப்பா, அவங்க அம்மா எல்லாம்.

நீங்க நேரடியா போய் உங்க குறையை சொல்லி நிவர்த்தி பண்றதுக்கு அருமையான வாய்ப்பு. ஒரு அரை நூற்றாண்டுக்கு பிறகு கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்கள் நமக்கு ஒரு வாய்ப்பு வழங்கி இருக்காரு. ஆக நம்ம பகுதியில் இருக்கிற எல்லோரும்… எல்லாத்துக்கும் ஒரு கட்சி இருக்கும், எல்லாருக்கும் ஒரு பற்றுதல் இருக்கும். இருந்தாலும் இந்த தேர்தல்ல எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு நம்முடைய வேட்பாளர் ஜெயலட்சுமி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்க முத்திரையிடனும்.

மற்றபடி கட்சி செய்யற திட்டம் எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரியும், அது தொடர்ந்து வரும். நம்ம ஊரு வேட்பாளர், உரிமையா போய் எல்லாரும் பாக்கலாம். அதனால வர்ற தேர்தல்ல எல்லாக் கட்சிக்காரங்களும் ஓட்டு கேப்பாங்க. அதை ஒரு பக்கம் வச்சிட்டு, நம்ம ஊரு பொண்ணு, இங்க எல்லாத்துக்கும் அறிமுகமானவங்க, நம்ம நேரடியா பார்க்கக்கூடிய வேட்பாளர், அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் முத்திரையிட்டு வெற்றி பெறச் செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொண்டு, இப்பொழுது வேட்பாளர் அவர்கள் வாக்கு சேகரிப்பார்.” என பேசினார்.

பின்னர் வேட்பாளர் ஜெயலட்சுமி பேசியதாவது: உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களைத் தேடி, உங்களின் ஆதரவைத் தேடி, உங்களின் ஆசியைத் தேடி வந்துள்ளேன்.” “உங்களின் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு உங்களின் பொற்பாதம் பணிந்து வேண்டி கேட்டுக்கொள்கிறேன். “சோ, உங்க எல்லாத்துக்கிட்டயும் உரிமையோட கேட்டுக்கிறேன், என்னை வந்து உங்களோட வாக்குகளை செலுத்தி அதிகமான வித்தியாசத்தில ஜெயிக்க வைக்கணும் அப்படின்னு வேண்டி கேட்டுக்கிறேன்.

“நானும் என்றென்றும் நம்ம ஊரை மறக்காம உங்களுக்கெல்லாம் நன்றி செலுத்தும் வகையில் உங்களுக்கான திட்டங்களையும் உங்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன் என்று இத்தருணத்தில் உங்களிடம் சொல்றதுல வந்து எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.”

“நம் திராவிட மாடல் 2.0 ஆட்சி மலர்ந்திட, நம் கழகத் தலைவர் சமூக நீதி காவலர் தளபதி ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதலமைச்சராக அரியணை ஏறிட, நம் மண்ணின் மைந்தர் அண்ணன் ஆ. ராசாவின் புகழ் ஓங்கிட வாக்களிப்பீர் உதயசூரியன், நமது சின்னம் உதயசூரியன், வெற்றிச் சின்னம் உதயசூரியன்! வெல்வோம் 200, படைப்போம் வரலாறு! நன்றி, வணக்கம்.” என பேசினார். முன்னதாக, ” ஒவ்வொரு தெருவிலும், அவருடைய சிறுவயதில் நடந்த மலரும் நினைவுகளை எடுத்து கூறினார்.

திமுகவை சேர்ந்த திமுக ஆலோசனைக்குழு உறுப்பினர் அட்சயகோபால், மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், திமுக பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, கீழக்கரை திமுக பிரமுகர் ஆதித்தியன், எசனை திமுக பிரமுகர்கள் மணிவாசகம், செந்தில், குணா, காமராஜ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோகிணி டீச்சர், ரெங்கராஜ், தேதிமுகவை சேர்ந்த முன்னாள் கீழக்கரை ஊராட்சித் தலைவர் சஞ்சீவிக்குமார், தேமுதிக பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் இளையராஜா, விசிக சேர்ந்த காமராஜ், ஸ்டாலின், திமுக செய்தி தொடர்பாளர் மீனா, வக்கீல் மதுபாலன் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர். வீதிகள் தோறும் பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வாழ்த்தி அனுப்பினர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!