AIADMK Party People arrested for protesting against merger of Jayalalithaa University with Annamalai University

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்காக சட்ட முன் வடிவு நேற்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் செய்தனர். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூரில் அதிமுகவினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் பழைய பேருந்து நிலையத்தில், மறியல் செய்து கண்டண கோஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், நகர செயலாளர் ராஜபூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த சாலை மறியலால் பழையபேருந்து நிலையம் காந்திசிலை அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பு ஏற்பட்டது. அங்கு தயாராக இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரை போலிஸார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.

படவிளக்கம்:

ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலையுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து? பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில், மறியல் போராட்டம் செய்த அதிமுவினரை படத்தில் காணலாம். ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், நகர செயலாளர் ராஜபூபதி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!