AIAWU Society demands to the march to Parliament Aug.9

பெரம்பலூர் மாவட்ட விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் தெரிவித்துள்ளதாவது;

வரும் ஆக. 9ம் தேதியன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவாசய தொழிலாளார்கள் சங்கத்தினர் சார்பில், நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த உள்ளதாகவும், அதில் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், வேலையிழந்த விவசாய தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணமாக ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும், 100 வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துவதுடன் ரூ. 400 சம்பளம் வழங்க வேண்டும், இத்திட்டத்தை பேரூராட்சி, நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி, திருமண உதவித் தொகைகளை தாமதமின்றி வழங்கவும், அனைத்து கிராமங்களுக்கும், குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கவும், வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வங்களில் வாங்கிய விவசாயம் மற்றும் கல்விக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் சார்பில் பேரணி ஆக.6 தேதி புறப்பாடு நடக்கிறது என்றும், விவசாய தொழிலாளர் சங்க அகில இந்திய தலைவர் எஸ். திருநாவுக்கரசு தலைமையில் நடக்க உள்ளது. அச்சங்கத்தின் அகிய இந்திய பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான விஜயராகவன் , தமிழ் மாநிலத் தலைவர் ஏ.லாசர் தமிழ் மாநில பொறுப்பு செயலாளர் வி. அமிர்தலிங்கம் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஏ.பழனிசாமி, மத்திய கமிட்டி உறுப்பினர் எஸ்.சந்திரன், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் வி.காமராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளதாகவும், பேரணிக்கு விவசாயிகள், பொதுமக்கள் ஆதரவளிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!