Airborne Electoral Rules in Perambalur District; Officers not found!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடி பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படாமல் காற்றில் பறக்கிறது. அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் பொதுமக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என தங்ககாசு, ரொக்கப்பணம், அண்டா, குண்டா, வேட்டி சேலைகள், வீடு வீடாக வழங்கினர். அதையும் தடுக்கவில்லை. மேலும், அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் தேர்தல் விளம்பரம் செய்யக்கூடாது, அதோடு, தட்டி, பேனர்கள் வைக்கக்கூடாது என்ற விதிமுறைகள் கடைபிடைக்க வில்லை. இன்றும் வாக்களர்களை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வாகனங்களில் அழைத்து சென்று வாக்களிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். அதனையும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்டும் காணமல் இருக்கின்றனர். ஆளும் கட்சிக்கு போட்டியாக எதிர்கட்சியும், இவர்களுக்கு போட்டியாக சுயேட்சைகளும் போட்டி போட்டுக் கொண்டு, விதிமுறைகள் மீறி வருகின்றனர். ஆனால், மற்றொரு அரசு ஊழியர்கள் வாக்குச் சாவடி பகுதிகளில் தங்கள் ஆதரவாளர்களுக்கு வாக்கு சேகரித்த சம்பவமும், பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.