Aishwarya’s death, in case ï vck demonstration demanding change CBCID


பெரம்பலூர்: இறந்த ஐஸ்வர்யாவின், வழக்கை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்ற கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று மதியம் கொளுத்தும் அனல் வெயிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், திருமாவளவன் உரையாற்றி போது தெரிவித்ததாவது:

பெரம்பலூர் அருகே இறந்து போன ஐஸ்வர்யாவின் வழக்கை காவல்துறை விசாரிக்காமல் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும்,

ஐஸ்வர்யாவின் காதலன் பார்த்தீபன் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை என்றும், காவல் துறையினர் வழக்கில் முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நிதியுதவி மறுப்பு:

முன்னதாக இறந்து போன ஐஸ்வர்யாவின் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருந்தது. அதற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆதரவாளர்களிடம் நிதி திரட்டிய போது காவல் துறை நிதியுதவி வழங்க கூடாது எனத் தெரிவித்துவிட்டதால், நிதியுதவி (நன்கொடை) வழங்குபவர்கள் முன்வரவில்லை,

ஆகையினால், விடுதலை சிறுத்தைகள் சார்பில் 30 ஆயிரத்திற்கு மேல் வழங்க கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும், இங்கு நீதி கேட்டு வந்துள்ளவர்கள் தங்களால் நிதியுதவி அளிக்குமாறு மேடையில் தெரிவித்தார். அப்போது அங்கிருந்த தொண்டர்கள் பலர் தங்களால் முடிந்தளவு நிதியுதவி அளித்தனர். அப்போது ரூ. 1 லட்சத்து 32 ஆயிரத்து 200 நிதி சேர்ந்தது. அதனை அப்படியே திருமாவளன் இறந்து போன இளம்பெண் ஐஸ்வர்யா குடும்பத்தினரிடம் மேடையிலேயே வழங்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் மற்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

வேறு கரை வேட்டி கட்டி வந்த மாற்றுக் கட்சியினர்

ஓட்டுக்காக பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருக்கும் அரசியல் வாதிகள் தாங்கள் சார்ந்த கட்சி வேட்டிகளை அவிழ்த்து வைத்துவிட்டு வேறு வண்ணக் கலர் வேட்டிகளில் கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முன்னாதாக போராட்டத்தில் ஐஸ்வர்யா என்பதற்கு பதிலாக திருமாவளன் ஐஸ்வர்யாராய் என இறப்பிற்கு நீதி வேண்டும் கோசமிட்டார். அங்கிருந்த தொண்டர்கள் ஐஸ்வர்யா என சங்கேத மொழியில் தெரிவித்ததை புரிந்து கொண்ட திருமாவளவன் பின்னர் ஐஸ்வர்யா என மாற்றி உச்சரித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!