All Food Shoppers are invited to register at a special camp: Food Safety Department (fssai)

பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மா.சவுமியா சுந்தரி விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகின்ற 18.11.2017 அன்று உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம் ஹோட்டல் அஸ்வின்ஸ்-பார்ட்டி ஹாலில் காலை 11.00 மணியளவில் நடைபெறுகிறது. இம்முகாமில் அனைத்து உணவு வணிகர்களும் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறாதவர்கள் வந்து செலுத்துச்சீட்டு வாங்கி பொது சேவை மையம் வாயிலாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

FSSAI உரிமம் பெறாத ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்படும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பேக்கேஜ் உணவு பொருட்கள் உட்பட உணவு பொருட்களின் தரத்தை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ( FSSAI ) கண்காணித்து வருகிறது.

தரமற்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகள், சுவையூட்டும் பொருட்கள் பயன்பாடு தொடர்பாக அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் உரிமம் பெறாமல் நடத்தப்படும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. ஓட்டல் மற்றும் ரெஸ்டாரெண்ட்கள் பல உரிமம் இன்றி இயங்கி வருகின்றன. உரிமம் எடுக்க மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது.

இதற்குள் உரிமம் பெறாவிட்டால் அவற்றை மூடி சீல்வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விதிமுறை ஓட்டல்களுக்கு மட்டுமின்றி, இலவசமாக பிரசாதம் வழங்கும் வழிபாட்டு தலங்களுக்கும் பொருந்தும். அதன்பிறகும் எங்களின் உரிமம் பெறாத உணவகங்கள் மீது நடவடிக்கை எடுத்து சீல் வைக்கப்படும்.

இந்த மூன்று மாத அவகாசத்தில் அனைத்து உணவு வர்த்தக நிறுவனங்களும் எங்களது உரிமத்தை பெற்றிருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டப்படி உரிமம் இல்லாமல் உணவு வர்த்தகத்தில் யாரும் ஈடுபடக்கூடாது என்று எப்எஸ்எஸ்ஏஐ (FSSAI) தெரிவித்துள்ளது.

உணவு உற்பத்தி, பதப்படுத்துதல், உணவு பேக்கேஜ், கேட்டரிங் சேவை, உணவு உற்பத்திக்கான பொருட்கள் விற்பனை போன்றவர்களுக்கும் இது அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது, என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!