AMMA Scheme Camp in Perambalur District: Collector V.Santha Announcement
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் ஏப்.13. அன்று வேப்பந்தட்டை வட்டத்தில் தேவையூர் (வடக்கு), குன்னம் வட்டத்தில் புதுவேட்டக்குடி மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் சில்லக்குடி (தெற்கு) ஆகிய வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன.
பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.