AMMA : Vehicle Repair Training: 100 rupees per day scholarship
பெரம்பலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கே.உதயசங்கர் விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அம்மா திறன் மேம்பாடு பயிற்சி திடடத்தின் கீழ் இரு சக்கர வாகன பழுது பார்த்தல் மாலை நேர பயிற்சி தொடங்கப்பட உள்ளதால் இப்பயிற்சியில் சேர தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பயிற்சி வகுப்பில் இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், இலகுரக வாகனம், பவர் ட்ரில்லர், விவசாயம் சார்ந்த கருவிகள் உள்ளிட்ட தொழிற்பிரிவுகளில் 4 மாத காலத்திற்கு தினசரி 4 மணி நேரம் வீதம் ( பிற்பகல் 3மணி முதல் 7 மணி வரை) மொத்தம் 300 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும்.
வேலை வாய்ப்பற்ற பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திய ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்த ஆண் பெண் இருபாலரும் வயது வரம்பின்றி இப்பயிற்சியில் சேரலாம்.
அதிகபட்சமாக ஒரு அணிக்கு 20 நபர்கள் மட்டும் கட்டமில்லாமல் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சியின் முடிவில் போக்குவரத்து படியாக 100 ரூபாய் உதவித்தொகையாக கணக்கிட்டு வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெறும் அனைவருக்கும் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை 941752604 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.