# amma sheme
பெரம்பலூர் மாவட்டத்தில், வரும் ஜன.06, அன்று வேப்பந்தட்டை வட்டத்தில் பிரம்மதேசம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட வி.ஆர்.எஸ்.எஸ்.புரம், குன்னம் வட்டத்தில் பேரளி(வ) மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் ஆதனூர்(வ) வருவாய் கிராமத்திற்குட்பட்ட குடிக்காடு ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.
பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம், என வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.